Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2375 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2375மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – இப்படி -வையம் தகளி-தொடங்கி-இவ்வளவும் வரத் தாம் பெற்ற பேற்றைச் சொல்லுகிறார் – கீழில் பாட்டில்-நெஞ்சே உள்ளத்தே வை -என்றார் – இப் பாட்டில் – தாம் அவனை அனுசந்தி என்ற அளவிலே அத்யபி நிவேசத்தோடே கூட ஸ்ரீ எம்பெருமான் உள்ளே புகுந்து தம் பக்கல் வ்யாமுக்தன் ஆனபடியை அருளிச் செய்கிறார் – இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் – 94
உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், – மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து,
உய்ந்து உணர்வு என்னும், Uyinthu Unarvu Ennum - விவேக வுண்ச்சியாகிற
ஒளி கொள் விளக்கு, Oli Kol Vilakku - உஜ்வலமான தீபத்தை
ஏற்றி, Aetri - ஏற்றி
அவனை நாடி வைத்து, Avanai Naadi Vaiththu - அவ்வெம்பெருமானைத் தேடிப்பிடித்து
வலைப்படுத்தேன், Valaipadutthen - ஸ்வாதீனப்படுத்திக்கொண்டேன்
மாயன், Maayan - அப்பெருமான்
பொன்றாமை, Ponraamai - குறைவின்றி
என் நெஞ்சத்து, En Nenchatthu - என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து, Pugundhu - வந்துசேர்ந்து
மெத்தென, Meththena - மெதுவாக
நின்றான், Nindraan - (முதலில்) நின்றான்
இருந்தான், Irundhaan - (பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான், Kidandhaan - (அதன் பிறகு) பள்ளிகொண்டருளினான்.