| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2376 | மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – நெஞ்சே-இப்படி உபகாரகனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளிலே வணங்கி-அவனை வாழ்த்து என்று திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு -நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் – 95 | புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய் இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும் சிந்தப் பிளந்த திருமால் திருவடியே வந்தித்தென் னெஞ்சமே வாழ்த்து. | அந்தி புகுந்து, Andhi Pugundhu - ஸாயங்காலமானது வந்துசேர்ந்து இலங்கும் பொழுதத்து, Ilankum Pozhudhatthu - விளங்கும் ஸமயத்திலே அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவ்வதரித்து, இகழ்ந்த இரணியனது ஆகம், Ikazhndha Iraniyanathu Aagam - நிந்தித்துக்கொண்டிருந்த ஹிரண்யா ஸுரனது சரீரத்தை சுகிர்ந்து, Sukirndhu - பலகூறாக வகிர்ந்து எங்கும் சிந்த, Engum Sintha - (ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக பிளந்த, Pilandha - பிளந்தொழித்த திருமால், Thirumaal - எம்பெருமானுடைய திருஅடியே, Thiruvadie - திருவடிகளையே என்நெஞ்சமே, Ennenjamai - எனது மனமே! வந்தித்து வாழ்த்து, Vandhithu Vazhththu - தலையார வணங்கி வாயாக வாழ்த்து |