திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2377 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2377மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – நித்ய ஸூரிகள் உடைய பரிமாற்றமும் பொறாதே ஸுகுமார்யத்தை உடையவன் -என்கிறது – அன்றிக்கே – அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அவன் திருவடிகளிலே வணங்கித் தங்கள் அபேஷிதம் பெறுவது -என்கிறார் மா மலரான் வார் சடையான் வல்லரே அல்லரே வாழ்த்து -நான் முகன் திருவந்தாதி -11 -என்னக் கடவது இறே – நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது – நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார் 96
வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, – கேழ்த்த அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன், அடித்தா மரையாம் அலர்.
பதவுரை Show / Hide
கேழ்த்த அடி, Kezhththa Adi - பெருத்த தாளையுடைய
தாமரை மலர் மேல், Thamarai Malar Mel - தாமரைப்பூவிற் பிறந்த
மங்கை, Mangai - பெரிய பிராட்டிக்கு
மணாளன், Manalaln - வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர், Adi Aam Thamarai Alar - திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர், Vaanor - தேவர்
வாழ்த்திய வாயர் ஆய், Vazhththiya Vayaar Aay - வாயால் வாழ்த்துகின்ற வராய்க்கொண்டு
மணி மகுடம், Mani Makudam - மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி, Thazhththi - தாழவிட்டு
வணங்க, Vananga - வணங்குவதனால்
தழும்பு ஆமே, Thazhumpu Aame - (அத்திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.