திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2378 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2378மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – கீழில் படியாய்-ஸ்ரீயபதியாய்-அயர்வறும் அமரரர்கள் அதிபதி யாகையாலே அவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெரும் அத்தனை -அல்லது ஸ்வ யத்னத்தாலே ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது -என்கிறார் – அயர்வறும் அமரரர்கள் பரிமாறும் நிலம் ப்ரஹ்மாதிகளுக்கு நிலம் அன்று என்கிறார் – இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் – 97
அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய, மலரெடுத்த மாமேனி மாயன், – அலரெடுத்த வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட் கெண்ணத்தா னாமோ இமை.
பதவுரை Show / Hide
அலர் எடுத்த உத்தியான், Alar Eduththa Uththiyaan - தாமரைப்பூ ஓங்கி யிருக்கப்பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த, Ezhilaaya Malar Eduththa - அழகிய காயம் பூப்போன்ற
மா மேனி, Maa Meeni - சரிய திருமேனியை உடையனுமான
மாயன், Maayan - எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான், Avar Eduththa Vannath Thaan - காஞ்சிமலர்போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான், Maa Malaran - தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான், Vaar Sadayaan - நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு, Endra Ivangadku - ஆகிய இத்தேவர்கட்கு
இமை, Imai - சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ, Ennaththaan Aamo - நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ