திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2379 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2379மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – தன்னை ஆஸ்ரயித்தவர்கள் உடைய விரோதிகளைப் போக்குமவன் என்கிறார் – நம்முடைய பிரதிபந்தகங்களைப் போக்கி சம்சார நிவ்ருத்தியைப் பண்ணித் தருவான் ஸ்ரீ எம்பெருமான் என்றபடி – தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் – 98
இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும், அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், – நமஞ்சூழ் நரகத்து தம்மை நணுகாமல் காப்பான், துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.
பதவுரை Show / Hide
இமம் சூழ் மலையும், Imam Soozh Malarum - பனியாலே சூழப்பட்டிருகிற இமயமலையையும்
இரு விசும்பும், Iru Visumbum - பெரிய ஆகாயத்தையும்
காற்றும், Kaatrum - வாயுவையும்
அமம் சூழ்ந்து, Amam Soozhnthu - (பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து
அற விளங்கி தோன்றும், Aru Vilangi Thondrum - மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை, Duragathai - குதிரைவடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை
தொட்டு, Thottu - திருக்கையால் பற்றி
வாய் பிளந்தான், Vaai Pilandhaan - (அவனது) வாயைக் கிழிந்துப்போட்ட பெருமான்
நம்மை, Nammai - நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான், Naman Soozh Narakaththu Nanugamal Karappaan - யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்