Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 238 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
238ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 5
அவ்வவ் விடம் புக்கு அவ் வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்
கொவ்வைக் கனி வாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே
எவ்வம் சிலை யுடை வேடர் கானிடைக் கன்றின் பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-5
தெய்வம்,Deivam - தேவர்களுக்கு
தலைவனை,Thalaivanai - நிர்வாஹகனான கண்ணனை
அ அ இடம் புக்கு,A A Idam Pukku - (மச்சு மாளிகை முதலான) அவ்வவ் விடங்களில் (ஏகாந்தமாகப்) புகுந்து
அ ஆயர் பெண்டிர்க்கு,A Aayar Pendirkku - (அவ்வவ் விடங்களிலுள்ள) அவ்விடைப் பெண்களுக்கு
அணுக்கன் ஆய்,Anukkan Aai - அந்தரங்கனாய்
கொவ்வை கனி,Kovvai Kani - (அவர்களுக்கு) கோவைப் பழம் போன்ற
வாய்,Vaai - (தன்) அதரத்தை
கொடுத்து,Koduthu - (போக்யமாக்க) கொடுத்துக் கொண்டு
கூழைமை செய்யாமே,Koolaimai Seiyyaame - கூழ்மைத் தன்மடித்துத் திரிய வொட்டாமல்
எவ்வும்,Evvum - துன்பத்தை விளைக்குமதான
சிலை உடை,Silai Udai - வில்லை(க்கையிலே) உடைய
வேடர்,Vedar - வேடர்களுக்கு(இருப்பிடமான)
கான் இடை,Kaan Idai - காட்டிலே
கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.