திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2380 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2380மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே நமக்கு பரம பிராப்யம் என்கிறார் – ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வபாவனான ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் – 99
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான், அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, – குட்டத்துக் கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான் தாள்முதலே நங்கட்குச் சார்வு.
பதவுரை Show / Hide
தொட்ட, Thotta - ஏந்தின
படை எட்டும், Padai Ettum - எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத, Tholaadha - தோல்வியடையாத
வென்றியான், Vendriyaan - ஜயசீலனும்
அட்டபுய காத்தான், Attapuy Kaaththaan - கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று, Annanru - முன்பொருகாலத்தில்
குட்டத்து, Kuttaththu - நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச, Kol Muthalai Thunja - மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான், Kuriththu Erintha Chakkaraththaan - இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது
தாள் முதலே, Thaal Mudhale - பாதமூலமே
நங்கட்கு, Nangadku - எங்களுக்கு
சார்வு, Saarvu - பரமப்ராப்யம்