திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2381 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2381மூன்றாம் திருவந்தாதி || ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் – ஸ்ரீ எம்பெருமான் புகலிடமாவது ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளை என்றும் புகலிடமாகப் பற்றினாருக்கு என்கிறார் – ஸ்ரீ எம்பெருமான் ஆபாஸ்ரயமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் திருவடிகளே என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் – 100
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், – காரார்ந்த வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண், தேனமரும் பூமேல் திரு.
பதவுரை Show / Hide
சக்கரத்தான், Chakkaraththaan - திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ், Than Thuzhai Thaar Vaal - குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான், Varai Maarban Thaan - மலைபோன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும், Muyankum - ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான், Kar Arnta Van - மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே
அமரும், Amarum - நிலைத்து நிற்கக் கூடியதான
மின், Min - மின்னல்போல
இமைக்கும், Imaykkum - விளங்குகின்றவளாய்
வண் தாமரை, Van Thamarai - அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு, Netu - நீண்ட
கண், Kan - திருக்கண்களை யுடையளாய்
தேன் அமரும் பூமேல், Ten Amarum Pumel - தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு, Thiru - பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு, Namakku Enrum Carvu - நமக்கு எப்போதும் சரணம்.