Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 239 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
239ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 6
மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்து இப் பாடி யெங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-6
என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனாகிய கண்ண பிரானை
வெண்ணெய்,Vennei - வெண்ணெயை
மிடறு,Midaru - கழுத்திலே
மெழுமெழுத்து ஓட,Mezhumezhuthu Oda - (உறுத்தாமல்) மெழுமெழுத்து ஓடும்படி
விழுங்கி,Vizhunghi - விழுங்கி விட்டு
போய்,Poi - (பிறரகங்களுக்குப்) போய்
பல படிறு,Pala Padiru - பல கள்ள வேலைகளை
செய்து,Seidhu - செய்து கொண்டு
இ பாடி எங்கும்,E Paadi Engum - இவ் விடைச்சேரி முழுதும்
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்
பல கடிறு திரி,Pala Kadiru Thiri - பல காட்டானைகள் திரியப் பெற்ற
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே
இடற,Idara - தட்டித் திறியும்படியாக
கன்றின் பின் போக்கினேன் ;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.