| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 24 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 2 | முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும் பத்து விரலும் மணி வண்ணன் பாதங்கள் ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்து காணீரே–1-2-2 | முத்தும்,Muttum - முத்துக்களையும் மணியும்,Maniyum - ரத்நங்களையும் வயிரமும்,Vairamum - வஜ்ரங்களையும் நல் பொன்னும்,Nal ponnum - மாற்றுயர்ந்த பொன்னையும் தத்திப்பதித்து,Tattippatitthu - மாறி மாறிப் பதித்து தலைப்பெய்தாற்போல்,Talaippeydaarpol - சேர்த்தாற்போலே எங்கும்,Engum - திருமேனி யெங்கும் மணி வண்ணன்,Mani vannan - மணி போன்ற வர்ணத்தை யுடையனான கண்ணனுடைய பாதங்கள்,Paathangal - திருவடிகளிலுள்ள பத்து விரலும்,Pathu viralum - விரல் பத்தும் ஒத்திட்டிருந்வா,Ottittirunva - ஒன்றோடொன்றெத்து அமைந்திருக்கும்படியை காணீர் ஒண் நுதலீர்,Kaanir onnudhalieer - ஒளிபொருந்திய நெற்றியை யுடையீர் காண்! வந்து காணீர்!,Vandhu kaanir! - வந்து காணீர்! |