திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 240 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
240பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 7
வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே கள்ளி யுணங்கு வெங் கானதரிடைக் கன்றின் பின் புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-7
பதவுரை Show / Hide
புள்ளின் தலைவனை,Pullin Thalaivanai - பெரிய திருவடிக்குத் தலைவனான கண்ண பிரானை
வள்ளி,Valli - கொடி போன்று
துடங்கு,Thudangu - துவளா நின்றுள்ள
இடை,Edai - இடையை யுடைய
மாதர்,Maadhar - இடைப் பெண்கள்
வந்து,Vandhu - (தாயாகிய என்னிடத்தில்) வந்து (இவன் செய்த தீமைகளைச் சொல்லி)
அலர் தூற்றிட,Alar Thoottida - பழி தூற்றிக் கொண்டிருக்கச் செய்தே
துள்ளி,Thulli - (அதை ஒரு பொருளாக மதியாமல்) (நிலத்தில் நில்லாமல்) துள்ளி
தோழரோடு,Thozharodu - (தன்) தோழர்களோடு கூட
விளையாடி,Vilayaadi - விளையாடிக் கொண்டு
திரியாமே,Thiriyame - திரிய வொட்டாமல்
கள்ளி,Kalli - (மழை யில்லாக் காலத்திலும் பசுமை மாறாத) கள்ளிச் செடியுங்கூட
உணங்கு,Unangu - (பால் வற்றி) உலரும் படியாய்
வெம்,Vem - மிக்க வெப்பத்தை யுடைய
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே
கான் அதர் இடை,Kaan Athar Idai - காட்டு வழியிலே