Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 241 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
241ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 8
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால்
என் இளங் கொங்கை அமுத மூட்டி யெடுத்து யான்
பொன்னடி நோவப் புலரியே கானில் கன்றின் பின்
என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-8
என் இள சிங்கத்தை,En Ila Singathai - எனது சிங்கக் குட்டி போன்ற கண்ணபிரானை
பன்னிரு திங்கள்,Panniru Thingal - பன்னிரண்டு மாஸ காலம்
வயிற்றில் கொண்ட ஆ பாங்கினால்,Vayitril Konda A Paanginal - (என்) வயிற்றிலே வைத்து நோக்கின அப்படிப்பட்ட அன்புக்கேற்ப
யான்,Yaan - (தாயாகிய) நான்
என்,En - என்னுடைய
இள,Ela - குழைந்திரா நின்றுள்ள
கொங்கை,Kongai - முலையிலுண்டான
அமுதம்,Amudham - பாலை
ஊட்டி,Ootti - (அவனுக்கு) உண்ணக் கொடுத்து
எடுத்து,Eduthu - வளர்த்து
புலரியே,Pulariye - (இப்படியாக அருமைப்பட நோக்கின பிள்ளையை) (இன்று) விடியற் காலத்திலேயே (எழுப்பி)
பொன் அடி நோவ,Pon Adi Nova - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக
கானில்,Kaanil - காட்டிலே
கன்றின் பின் போக்கினேன்;,Kanrin Pin Pokkinean - கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.