திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 242 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
242பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை) (யசோதப்பிராட்டி கண்ணனைக் கன்றின்பின் போக்கினதை எண்ணி அநுதபித்தல்) (கலிநிலைத்துறை) 9
குடையும் செருப்பும் கொடாதே தாமோ தரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரற்களுடை கடிய வெங் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே–3-2-9
பதவுரை Show / Hide
என் பிள்ளையை,En Pillaiyai - என் மகனான
தாமோதரனை,Thaamodharanai - கண்ணபிரானை,
குடையும்,Kudaiyum - குடையையும்
செருப்பும்,Seruppum - செருப்பையும்
கொடாதே,Kodaadhe - (அவனுக்குக்) கொடாமல்
கொடியேன் நான் ,Kodiyen Naan - கொடியவளாகிய நான்
உடையும்,Udaikum - (ஸூர்யனுடைய வெப்பத்தாலே) உடைந்து கிடப்பனவாய்
கடியன,Kadiyana - கூரியனவாய்க் கொண்டு
ஊன்று,Oonru - (காலிலே) உறுத்துவனவாய்
வெம்,Vem - (இப்படி) அதி தீக்ஷ்ணமான
பரற்கள் உடை,Parargal Udai - பருக்காங் கல்லை யுடைய
கடிய வெம்,Kadiya Vem - அத்யுஷ்ணமான
கான் இடை,Kaan Idai - காட்டிலே
கால் அடி நோவ கன்றின் பின் போக்கினேன்,Kaal Adi Novu Kanrin Pin Pokkinen - அழகிய திருவடிகள் நோவெடுக்கும் படியாக கன்றுகளின் பின்னே (திரியும்படி) அனுப்பினேனே!
எல்லே பாவமே!,Elle Paavame - மஹாபாபம்! மஹாபாபம்.