| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 244 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | சீலைக் குதம்பை ஒரு காது ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும் குளிர் முத்தின் கோடாலமும் காலிப் பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானோ மற்றாருமில்லை–3-3-1 | நங்கைமீர்,Nangaimir - பெண்காள்!, ஒரு காது,Oru Kaadu - ஒரு காதிலே சீலைக் குதம்பை,Seilai Kudambai - சீலைத் தக்கையையும் ஒரு காது,Oru Kaadu - மற்றொரு காதிலே செம் நிறம் மேல் தோன்றிப் பூ,Sem Niram Mel Thonrip Poo - செங்காந்தள் பூவையும் (அணிந்து கொண்டு) கூறை உடையும்,Koorei Udaiyum - திருப் பரியட்டத்தின் உடுப்பையும் கோலம்,Kolam - (அது நழுவாமைக்குச் சாத்தின) அழகிய பணை,Panai - பெரிய கச்சும்,Kachum - கச்சுப் பட்டையையும் குளிர்,Kulir - குளிர்ந்திரா நின்றுள்ள முத்தின்,Muthin - முத்தாலே தொடுக்கப் பெற்று கோடு,Kodu - (பிறை போல்)வளைந்திருக்கின்ற ஆலமும்,Aalamum - ஹாரத்தையும் காலி பின்னே,Kaali Pinne - (உடையனாய்க் கொண்டு) கன்றுகளின் பின்னே வருகின்ற,Varugindra - (மீண்டு)வாரா நின்ற கடல் வண்ணன்,Kadal Vannan - கடல் போன்ற நிறத்தனான கண்ணனுடைய வேடத்தை,Vedaththai - வேஷத்தை வந்து காணீர்,Vandhu Kaanir - வந்து பாருங்கள்; ஞாலத்து,Gnalathu - பூ மண்டலத்திலே புத்திரனை,Puthiranai - பிள்ளையை பெற்றார்,Pettrar - பெற்றவர்களுள் நானே,Naane - (’நல்ல பிள்ளை பெற்றவள்’ என்று சொல்லத் தக்கவள்) நான் ஒருத்தியே யாவேன்; மற்று ஆரும் இல்லை,Matru Aarum Illai - வேறொருத்தியுமில்லை. |