| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 245 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | கன்னி நன் மா மதிள் சூழ் தரு பூம் பொழில் காவிரித் தென்னரங்கம் மன்னிய சீர் மது சூதனா கேசவா பாவியேன் வாழ்வுகந்து உன்னை இளங் கன்று மேய்க்கச் சிறு காலே யூட்டி ஒருப் படுத்தேன் என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா–3-3-2 | கன்னி,Kanni - அழிவற்ற நல்,Nal - விலக்ஷணமான மா மதிள்,Maa Mathil - பெரிய மதிள்களாலே சூழ் தரு,Soozh Tharu - சூழப்பட்டு பூ பொழில்,Poo Pozhil - பூஞ்சோலைகளை யுடைய காவிரி,Kaaviri - காவேரி நதியோடு கூடிய தென் அரங்கம்,Then Arangam - தென் திருவரங்கத்தில் மன்னிய,Manniya - பொருந்தி யெழுந்தருளி யிருக்கின்ற சீர்,Seer - கல்யாண குண யுக்தனான மது சூதனா,Madhu Soothana - மதுஸூதநனே! [கண்ணபிரானே!] கேசவா,Kesavaa - கேசவனே! பாவியேன்,Paaviyeen - பாவியாகிய நான் வாழ்வு உகந்து,Vaazhvu Ugandhu - (நமது ஜாதிக்கேற்ற கன்று மேய்க்கை யாகிற) ஜீவநத்தை விரும்பி உன்னை,Unnai - (இவ் வலைச்சலுக்கு ஆளல்லாத) உன்னை சிறுகாலே,Sirukaale - விடியற்காலத்திலேயே ஊட்டி,Ootti - உண்ணச் செய்து இள கன்று மேய்க்க,Ela Kanru Meikka - இளங்கன்றுகளை மேய்க்கைக்காக (அவற்றின் பின்னே போக) ஒருப்படுத்தேன்,Orupadutthen - ஸம்மதித்தேன்; என்னில்,Ennil - (இப்படி உன்னை அனுப்பிவிட்டுப் பொறுத்திருந்த) என்னிற்காட்டில் மனம் வலியாள்,Manam Valiyaal - கல் நெஞ்சை யுடையளான ஒரு பெண்,Oru Pen - ஒரு ஸ்த்ரீயும் இல்லை,Ellai - (இவ் வுலகில்) இல்லை; என் குட்டனே,En Kuttane - எனது குழந்தாய்! முத்தம் தா,Mutham Thaa - (எனக்கு) ஒரு முத்தம் கொடு. |