Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 246 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
246ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறி யோடி கார்க்கோடல் பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயிற் சாயல் பின்னை மணாளா நீராட்டமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனு முண்டிலன் உன்னோடு உடனே யுண்பான்–3-3-3
காடுகள் ஊடு போய்,Kaadugal Oodu Poi - (பற்பல) காடுகளிலுள்ளே புகுந்து
மறி ஓடி,Mari Odi - (கன்றுகள் கை கழியப் போகாத படி) (அவற்றை) மறிக்கைக்காக [திருப்புகைக்காக] முன்னே ஓடி

கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - (அக்) கன்றுகளை மேய்த்து
கார் கோடல் பூ சூடி,Kaar Koadal Poo Soodi - பெரிய கோடல் பூக்களை முடியிலணிந்து கொண்டு
வருகின்ற,Varugindra - (மீண்டு) வருகின்ற
தாமோதரா,Thaamotharaa - கண்ணபிரானே!
உன் உடம்பு,Un Udambu - உன் உடம்பானது
கன்று தூளி காண்,Kanru Thooli Kaan - கன்றுகளால் துகைத்துக் கிளப்பபட்ட தூளிகள் படியப் பெற்றுள்ளது காண்;
மயில் பேடை,Mayil Paedai - பெண் மயில் போன்ற
சாயல்,Saayal - சாயலை யுடைய
பின்னை,Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு
மாணாளா,Maanalaa - வல்லபனானவனே!
நீராட்டு அமைத்து வைத்தேன்,Neeraattu Amaithu Vaithen - (இந்த உடம்பை அலம்புவதற்காக) நீராட்டத்துக்கு வேண்டியவற்றை ஸித்தப்படுத்தி வைத்திருக்கின்றேன்;
ஆடி,Aadi - (ஆகையால் நீ) நீராடி
அமுது செய்,Amudhu Sei - அமுது செய்வாயாக;
உன்னோடு உடனே,Unnodu Udane - உன்னோடு கூடவே
உண்பான்,Unbaan - உண்ண வேணுமென்று
அப்பனும்,Appanum - (உன்) தகப்பனாரும்
உண்டிலன்,Undilan - (இதுவரை) உண்ணவில்லை.