Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 247 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
247ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
கடியார் பொழிலணி வேங்கடவா கரும் போரேறே நீ யுகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங் கானிடைக் கன்றின் பின் போன சிறுக் குட்டச் செங் கமல
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்–3-3-4
கடி ஆர்,Kadi Aar - (மலர்களின்) பரிமளம் நிறைந்த
பொழில்,Pozhil - சோலைகளை யுடைய
அணி,Ani - அழகிய
வேங்கடவா,Vengadavaa - திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே!
போர்,Por - யுத்தஞ்செய்ய முயன்ற
கரு ஏறே,Karu Eare - காள ரிஷபம் போல் செருக்கி யிருக்குமவனே!
மாலே,Maale - (கன்றுகளிடத்தில்) மோஹமுள்ளவனே!
எம்பிரான்,Empiraan - எமக்கு ஸ்வாமி யானவனே!
நீ உகக்கும்,Nee Ugakkum - நீ விரும்புமவையான
குடையும்,Kudaiyum - குடையையும்
செருப்பும்,Seruppum - செருப்பையும்
குழலும்,Kuzhalum - வேய்ங்குழலையும்
தருவிக்க,Tharuviikka - (நான் உனக்குக்) கொடுக்கச் செய்தேயும்
கொள்ளாதே,Kollaadhe - (அவற்றை நீ) வாங்கிக் கொள்ளாமல்
போனாய்,Poonaai - (கன்றுகளின் பின்னே) சென்றாய்;
கடிய வெம் கான் இடை,Kadiya Vem Kaan Idai - மிகவும் வெவ்விய காட்டிலே
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே
போன,Poona - தொடர்ந்து சென்ற
சிறு குட்டன்,Siru Kuttan - சிறுப் பிள்ளையாகிய உன்னுடைய
செம் கமலம் அடியும்,Sem Kamalam Adiyum - செந் தாமரைப் பூப் போன்ற திருவடிகளும்
வெதும்பி,Vedumbi - கொதிக்கப் பெற்று
உன் கண்கள்,Un Kangal - உன் கண்களும்
சிவந்தாய்,Sivandhaai - சிவக்கப் பெற்றாய்;
நீ;,Nee - நீ;
அசைந்திட்டாய்,Asaindittai - (உடம்பு) இளைக்கவும் பெற்றாய்