Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 248 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
248ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா சிறுக் குட்டச் செங்கண் மாலே
சிற்றாடையும் சிறுப் பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக் கலந்துடன் வந்தாய் போலும்–3-3-5
முன்,Mun - (பாரதப் போர் செய்த) முற் காலத்தில்
பற்றார்,Patraar - (உனது உயிர் போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர்
நடுங்கும்,Nadungum - நடுங்கும்படி
பாஞ்ச சன்னியத்தை,Paancha Sanniyaththai - சங்கத்தை
போர் ஏறே,Por Eare - போர் செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே!-எனக்கு விதேயனாய்
சிறு ஆயர் சிங்கமே,Siru Aayar Singame - சிறிய இடைப் பிள்ளைகளுள் சிங்கக் குட்டி போன்றுள்ளவனே!
சீதை,Seethai - ஸீதாப் பிராட்டிக்கு
மணாளா,Manaalaa - வல்லபனானவனே!
சிறு குட்டன்,Siru Kuttan - சிறு பிள்ளையாயிருப்பவனே!
செம் கண் மாலே,Sem Kan Maale - (இப்படியிருக்கச் செய்தேயும்) செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடைய ஸர்வேச்வரனாக விளங்குமவனே!
நீ;,Nee - நீ;
சிறு ஆடையும்,Siru Aadaiyum - (உன் பருவத்துக்குத் தக்க) சிறிய திருப்பரிவட்டமும்
சிறு பத்திரமும் இவை,Siru Paththiramum Ivai - குற்றுடை வாளுமாகிற இவற்றை
கட்டிலின் மேல் வைத்து போய்,Kattilin Mel Vaithu Poi - (காட்டுக்குப் போகையிலுள்ள விரைவாலே) (கண் வளர்ந்தருளின) கட்டிலின் மேலே வைத்து மறந்து போய்
கன்று ஆயரோடு,Kanru Aayarodhu - கன்று மேய்க்கிற இடைப் பிள்ளைகளுடனே
கன்றுகள் மேய்த்து,Kanrugal Meithu - கன்றுகளை மேய்த்து விட்டு
கலந்து உடன்,Kalandhu Udan - (மீண்டு மாலைப் பொழுதிலே) (அந்த தன்னேராயிரம் பிள்ளைகளோடே) கூடிக் கலந்து
வந்தாய் போலும்,Vandhai Poolum - (வீட்டுக்கு) வந்தாயன்றோ?.