| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 249 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | அஞ்சுடராழி உன் கையகத் தேந்தும் அழகா நீ பொய்கை புக்கு நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்தி ருந்தேன் என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏது மோரச்ச மில்லை கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய்–3-3-6 | அம் சுடர்,Am sudar - அழகிய ஒளியை யுடைய ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை கை அகத்து,Kai akathu - திருக் கையிலே ஏந்தும்,Aendum - தரியா நின்றுள்ள அழகா,Azhagaa - அழகப் பிரானே! நீ;,Nee - நீ; பொய்கை,Poigai - (காளியன் கிடந்த) பொய்கையிலே புக்கு,Pukku - போய்ப் புகுந்து பிணங்கவும்,Pinangavum - (அவ் விடத்தில்) சண்டை செய்த போதும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன்,Naan uyir vaazndhu irundhen - நான் ஜீவித்திருந்தேன்; என் செய்ய,En seyyya - ஏதுக்காக என்னை,Ennai - என்னை வயிறு மறுக்கினாய்,Vayiru marukkinai - (இப்படி) வயிறு குழம்பச் செய்கின்றாய்; ஏது ஓர் அச்சம் இல்லை,Aethu or achcham illai - (உனக்குக்) கொஞ்சமும் பயமில்லையே; காயாம் பூ வண்ணம் கொண்டாய்,Kaayaam poo vannam kondai - காயாம் பூப் போன்ற வடிவு படைத்தவனே! கஞ்சன்,Kanjan - கம்ஸனுடைய மனத்துக்கு,Manaththukku - மநஸ்ஸுக்கு உகப்பனவே,Ugappanave - உகப்பா யுள்ள வற்றையே செய்தாய்,Seythaay - செய்யா நின்றாய். |