திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 25 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 3 | பணைத் தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப் பிள்ளை
இணைக் காலில் வெள்ளித் தளை நின்றிலங்கும்
கணைக் கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே–1-2-3 | பதவுரை Show / Hideபணை,Panai - மூங்கில்போன்ற தோள்,Thol - தோள்களை யுடையளாய் இள,Ila - இளமைப் பருவத்தை யுடையளான ஆய்ச்சி,Aaychi - யசோதையினுடைய பால் பாய்ந்த,Paal paayndha - பால் சொரிகிற கொங்கை,Kongai - முலையை அணைத்து,Anaiththu - (திருக்கையால்) அணைத்துக்கொண்டு ஆர,Aara - வயிறு நிரம்ப உண்டு,Undu - (பாலை) அமுது செய்து கிடந்த,Kidandha - (களித்துக்) கிடக்கின்ற இ பிள்ளை,I pillai - இந்தக் கண்ண பிரானுடைய இணை,Inai - சேர்த்தி யழகு அமைந்த காலில்,Kaalil - திருவடிகளில் வெள்ளி தளை நின்று,Velli thalai nindru - வெள்ளித் தண்டை நின்று இலங்கும்,Ilangum - விளங்கா நிற்கிற கணைக்கால் இருந்த ஆ,Kanaikkaal irundha aah - கணைக்காலிருந்தபடியை காணீர்! காரிகையீர்,Kaarigaiyer - அழகுடைய பெண்காள் வந்து காணீர்!! |