| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 250 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | பன்றியும் ஆமையும் மீனமு மாகிய பாற் கடல் வண்ணா உன் மேல் கன்றி னுருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரன் தன்னை சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே விளங்கா யெறிந்தாய் போலும் என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கன மாவார்களே–3-3-7 | பன்றியும்,Panriyum - மஹா வராஹமாயும் ஆமையும்,Aamiyum - ஸ்ரீகூர்மமாயும் மீனமும்,Meenamum - மத்ஸ்யமாயும் ஆகிய,Aagiya - திருவவதரித்தருளின பால் கடல் வண்ணா,Paal kadal vanna - பாற் கடல் போல் வெளுத்திருந்துள்ள திருமேனியை யுடையவனே! உன் மேல்,Un mel - உன்னை நலிய வேணுமென்ற எண்ணத்தினால் கன்றின் உரு ஆகி,Kanrin uru aagi - கன்றின் உருவத்தை எடுத்துக் கொண்டு மேய் புலத்தே வந்து,Mey pulathey vandhu - (கன்றுகள்) மேயும் நிலத்தில் வந்து கலந்த கள்ளம் அசுரர் தம்மை,Kallam asurar thammai - க்ருத்ரிமனான அஸுரனை சென்று,Senru - (அவன் சேஷ்டையாலே அவனை அசுரனென்றறிந்து) (அக்கன்றின் அருகிற்) சென்று சிறு கைகளாலே,Siru kaikalaale - (உனது) சிறிய கைகளாலே பிடித்து,Pitithu - (அக்கன்றைப்) பிடித்து விளங்காய்,Vilangaai - (அஸுராவிஷ்டமானதொரு) விளா மரத்தின் காய்களை நோக்கி எறிந்தாய் போலும்,Erindhaai polum - விட்டெறிந்தா யன்றோ; என் பிள்ளைக்கு,En pillaiyukku - என் பிள்ளையான கண்ணபிரானுக்கு தீமை செய்வார்கள்,Theemai seivargal - தீமைகளை உண்டுபண்ணுமவர்கள் என்றும்,Endrum - என்றைக்கும் அங்ஙனம் ஆவார்கள்,Angnanam aavargal - அவ் விளவும் கன்றும் போலே நசித்துப் போகக் கடவர்கள். |