Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 251 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
251ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்துடன் உண்டாய் போலும்
ஊட்ட முதலிலேன் உன் தன்னைக் கொண்டு ஒரு போதும் எனக் கரிது
வாட்டமிலாப் புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்–3-3-8
கேசவா,Kesavaa - கண்ணபிரானே!
கேட்டு அறியாதன,Kaettu ariyaadhana - (உன் விஷயமாக இதுவரை நான்) கேட்டறியாதவற்றை
கேட்கின்றேன்,Kaetkinraen - (இன்று) கேட்கப் பெற்றேன்;
கோவலர்,Kovalara - (அவற்றில் ஒன்று சொல்லுகின்றேன் கேள்;) கோபாலர்கள்
இந்திரற்கு,Indirarku - இந்திரனைப் பூஜிப்பதற்காக
காட்டிய,Kaattiya - அனுப்பிய
சோறும்,Soruma - சோற்றையும்
கறியும்,Kariyuma - (அதுக்குத் தக்க) கறியையும்
தயிரும்,Thairuma - தயிரையும்
உடன் கலந்து,Udan kalandhu - ஒன்று சேரக் கலந்து
உண்டாய் போலும்,Undaai poolum - உண்டவனன்றோ நீ;
ஊட்ட,Ootta - (இப்படி உண்ண வல்ல பெரு வயிற்றாளனான உன்னை) (நாடோறும்) ஊட்டி வளர்க்க(த்தக்க)
முதல் இலேன்,Mudhal ilaen - கைம் முதல் எனக்கில்லை;
உன் தன்னை கொண்டு,Un thannai kondu - உன்னை வைத்துக் கொண்டு
ஒரு போதும்,Oru pothum - ஒரு வேளையும்
எனக்கு அரிது,Enakku aridhu - என்னால் ஆற்ற முடியாது;
வாட்டம் இலா,Vaattam ilaa - (என்றும்) வாடாத
புகழ்,Pugazh - புகழை யுடைய
வாசு தேவா,Vaasu Devaa - வஸுதேவர் திருமகனே!
இன்று தொட்டும்,Indru thottum - இன்று முதலாக
உன்னை,Unnai - உன்னைக் குறித்து
அஞ்சுவன்,Anjuvan - அஞ்சா நின்றேன்.