திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2516 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2516திருவிருத்தம் || 39
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே
பதவுரை Show / Hide
நீலம், Neelam - நீலமணிமயமான
தடவரை மேல், Thadavarai Mel - பெரியதொரு மலையின் மேலுள்ள
புண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து, Pundareekam Nedhu Thadangal Pola Polinthu - பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்
எமக்கு எல்லாத இடத்தவும், Emakku Elladha Idaththavum - எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை (எவையென்னில்)
பொங்கு முந்நீர், Pongu Munnir - கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்
விசும்புக்கும் பிரான், Visumbukkum Piraan - விண்ணுலகத்துக்குத் தலைவனும்
மற்றும் நல்லோர்பிரான், Mattrum Nalloorpiraan - மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்
கோலம் கரிய பிரான், Kolam Kariya Piraan - திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான
எம்பிரான், Embiraan - எம்பெருமானுடைய
கண்ணின், Kannin - திருக்கண்களினுடைய
கோலங்களே, Kolangalye - அழகுகளேயாம்.