Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 252 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
252ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை) (கண்ணன் கன்றுகள்மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்தல்) (எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
திண்ணார் வெண் சங் குடையாய் திருநாள் திருவோணமின் றேழு நாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப் பல்லாண்டு கூறு வித்தேன்
கண்ணாலம் செய்யக் கறியும் கலத்தரிசியும் ஆக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய் திங்கே யிரு–3-3-9
திண் ஆர்,Thin Aar - திண்மை பொருந்திய
வெண் சங்கு,Ven Sangu - வெண் சங்கத்தை
உடையாய்,Udaiyaai - (திருக் கையில்) ஏந்தி யுள்ளவனே!
கண்ணா,Kanna - கண்ணபிரானே!
திருநாள்,Thirunaal - (நீ பிறந்த) திருநக்ஷத்திரமாகிய
திருஓணம்,Thiru Onam - திருவோண க்ஷத்திரம்
இன்று,Endru - இற்றைக்கு
ஏழு நாள்,Ezh NaaL - ஏழாவது நாளாகும்;
முன்,Mun - (ஆதலால்,) முதல் முதலாக
பண் ஏர் மொழியாரை கூவி,Pan Aer Mozhiyaarai Koovi - பண்ணோடே கூடின அழகிய பேச்சை யுடைய மாதர்களை யழைத்து
முளை அட்டி,Mulai Atti - அங்குராரோபணம் பண்ணி
பல்லாண்டு கூறுவித்தேன்,Pallaandu Kooruvithen - மங்களாசாஸனமும் பண்ணுவித்தேன்;
கண்ணாலம் செய்ய,Kannaalam Seyya - (திருவோணத்தினன்று) திருக் கல்யாணம் செய்வதற்கு
கறியும்,Kariyum - கறி யமுதுகளையும்
அரிசியும்,Arisiyum - அமுது படியையும்
கலத்தது ஆக்கி வைத்தேன்,Kalathathu Aakki Vaithen - பாத்திரங்களில் சேமித்து வைத்திருக்கின்றேன்;
நீ-;,Nee - நீ-;
நாளைத் தொட்டு,NaaLai Thottu - நாளை முதற்கொண்டு
கன்றின் பின்,Kanrin Pin - கன்றுகளின் பின்னே
போகேல்,Pogael - (காட்டுக்குப்) போக வேண்டா;
கோலம் செய்து,Kolam Seythu - (உன் வடிவுக்குத் தக்க) அலங்காரங்களைச் செய்து கொண்டு
இங்கே இரு,Engae Eru - இந்த அகத்திலேயே இருக்கக் கடவாயாக.