திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2520 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2520திருவிருத்தம் || 43
கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால் விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் இவர்க்கும் எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே
பதவுரை Show / Hide
கண்ணும், Kannum - திருக்கண்களும்
செந்தாமரை, Senthamarai - செந்தாமரைப் பூவையொப்ப
கையும், Kaiyum - திருக்கைகளும்
அவை, Avai - அத்தாமரைப் பூவை யொப்ப
அடியோ, Adiyo - திருவடிகளும்
மதி விகற்பால், Madi Vikarpal - ஞானத்தின் மிகுதியால்
விண்ணும் கடந்து, Vinnum Kadandhu - ஸ்வர்க்க லோகத்தாரை மேலிட்டு
உம்பர் அப்பால் மிக்கு, Umbar Appal Mikku - அதன் மேலிடத்துள்ள ஸத்ய லோகத்தார்க்கும் அப்பாற்சென்று.
அவையே, Avaiye - அத்தாமரைப் பூக்களையே யொப்ப.
எம்பிரானது, Embiranathu - எம்பெருமானுடைய
எழில் நிறம், Ezhil Niram - அழகிய திருமேனி விளக்கம்
வண்ணம் கரியது ஒர் மால் வரைபோன்று, Vannam Kariyadhu Or Maal Vairaiponru - நிறத்தில் கறுத்ததான வஒரு பெரிய மலையையொத்து
மற்ற எப்பால் இவர்க்கும், Matra Eppal Ivarkkum - அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்
எண்ணும் இடத்துவோ, Ennum Idathuvo - (இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று.)