திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 254 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
254பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளி தாழ் பீலி குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழை கொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி நுழைவனர் நிற்பனராகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்தொழிந்தனரே–3-4-1
பதவுரை Show / Hide
தழைகளும் தொங்கலும்,Thazhaigalum Thongalum - பலவகைப் பட்ட மயிற் பீலிக் குடைகள்
எங்கும் ததும்பி,Engum Thathumbi - நாற் புறங்களிலும் நிறைந்து
தண்ணுமை,Thannumai - ம்ருதங்கங்களும்
எக்கம் மத்தளி,Ekkam Maththali - ஒரு தந்த்ரியை யுடைய மத்தளி வாத்யங்களும்
தாழ் பீலி,Thazh Peeli - பெரிய விசிறிகளும்
குழல்களும்,Kuzhalgalum - இலைக் குழல், வேய்ங்குழல் என்ற குழல்களும்
கீதமும்,Geethamum - இவற்றின் பாட்டுக்களும்
எங்கும் ஆகி,Engum Aagi - எங்கும் நிறைய
கோவிந்தன்,Govindan - (இந்த ஸந்நிவேசத்துடனே)கண்ணபிரான்
வருகின்ற,Varugindra - (கன்று மேய்த்து மீண்டு) வருகின்ற
கூட்டம்,Koottam - பெரிய திருவோலக்கத்தை
கண்டு,Kandu - பார்த்து
மங்கைமார்,Mangaimar - யுவதிகளான இடைப் பெண்கள்
மழை கொல் ஓ வருகின்றது என்று சொல்லி,Mazhai Kol O Varugindrathu Endru Solli - ‘மேக ஸமூஹமோ தான் (தரை மேலே நடந்து) வருகின்றது!’ என்று உல்லேகித்து
சாலகம் வாசல் பற்றி,Saalagam Vaasal Patri - ஜாலகரந்த்ரங்களைச் சென்று கிட்டி
நுழைவனர் நிற்பனர் ஆகி,Nuzhaivanar Nrirpanar Aagi - (வியாமோஹத்தாலே சிலர் மேல் விழுவதாகச் சால்க வாசல் வழியே) நுழையப் புகுவாரும், (சிலர் குருஜந பயத்தாலே) திகைத்து நிற்பாருமாகி
எங்கும்,Engum - கண்ணபிரான் நடந்த வழி முழுவதும்
உள்ளம் விட்டு,Ullam Vittu - தங்கள் நெஞ்சைப் பரக்க விட்டு
ஊண்,Oon - ஆஹாரத்தை
மறந்தொழிந்தனர்,Maranthoizhindhanar - மறந்து விட்டார்கள்.