Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 255 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
255ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2
வல்லி நுண் இதழன்ன ஆடை கொண்டு வசை யறத் திரு வரை விரித் துடுத்து
பல்லி நுண் பற்றாக உடை வாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பல தழை நடுவே
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல்லாயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும் எதிர் நின்று அங்கினவளை இழவேன்மினே–3-4-2
பிள்ளை,Pillai - நந்த கோபர் மகனான கண்ணன்,
வல்லி,Valli - கற்பகக் கொடியினது
நுண்,Nun - நுட்பமான
இதழ் அன்ன,Ethazh Anna - இதழ் போன்று ஸுகுமாரமான
ஆடை கொண்டு,Aadai Kondu - வஸ்த்ரத்தைக் கொணர்ந்து
திரு அரை ,Thiru Arai - (தனது) திருவரையிலே
வசை அற,Vasai Ara - ஒழுங்காக
விரித்து உடுத்து,Virithu Uduthu - விரித்துச் சாத்திக் கொண்டு
பணை கச்சு,Panai Kachu - (அதன்மேல்) பெரிய கச்சுப் பட்டையை
உந்தி,Undhi - கட்டிக் கொண்டு
உடை வாள்,Udai Vaal - (அதன் மேல்) கத்தியை
பல்லி நுண் பற்று ஆக சாத்தி,Palli Nun Patru Aaga Saathi - பல்லியானது சுவரிலே இடை வெளியறப் பற்றிக் கிடக்குமா போலே நெருங்கச் சாத்திக் கொண்டு
நல்,Nal - அழகியதும்
நறு,Naru - பரிமளமுள்ளதுமான
முல்லை மலர்,Mullai Malar - முல்லைப் பூவையும்
வேங்கை மலர்,Vengai Malar - வேங்கைப் பூவையும் (தொடுத்து)
அணிந்து,Anindhu - (மாலையாகச்) சாத்திக் கொண்டு
பல் ஆயர்,Pal Aayar - பல இடைப் பிள்ளைகளுடைய
குழாம் நடுவே,Kuzhaam Naduvae - கூட்டத்தின் நடுவில்
பல தழை நடுவே,Pala Thazhai Naduvae - பல மயில் தோகைக் குடை நிழலிலே
எல்லி அம் போது ஆக,Elli Am Poothu Aaga - ஸாயம் ஸந்த்யா காலத்திலே
வரும்,Varum - வருவன்
அங்கு,Angu - அவன் வரும் வழியில்
எதிர் நின்று,Ethir Nindru - எதிராக நின்று
வளை இனம்,Valai Inam - கை வளைகளை
இழவேல்மின்,Ezhavaelmin - இழவாதே கொள்ளுங்கள்.