| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2552 | திருவிருத்தம் || 75 | உலாகின்ற கெண்டை ஒளியம்பு, எம்ஆவியை ஊடுருவக் குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்தீர்,குனிசங்கிடறிப் புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார் நிலாகின்ற வைகுந்தமோ,வையமோ? நும்நிலையிடமே. | உலாகின்ற, Ulaakindra - (காதளவுஞ் சென்று மீண்டு) உலாவுகிற கெண்டை, Kendai - கெண்டை மீன் வடிவமான ஒளி அம்பு, Oli Ambu - ஒளியையுடைய (கண்களாகிய) அம்புகள் எம் ஆவியை ஊடு உருவ, Em Aaviyai Oodu Uruva - எமது உயிரை ஊடுருவித் துளைக்கும்படி குலாவுகின்ற, Kulavugindra - (அவ்வம்புகளைப் பிரயோகிப்பதற்கு) வளைகிற வெம்சிலை, Vemsilai - (புருவமாகிய) கொடிய வில்லையுடைய வாள் முகத்தீர், Vaal Mugaththir - ஒளியுள்ள முகமுடையவர்களே! குனி சங்கு இடறி, Kuni Sangu Idari - வளைந்த வடிவமுள்ள சங்குகளைக் கொழித்து எழுந்து புலாகின்ற, Pulakindra - மீன் நாற்றம் வீசப்பெற்ற வேலை, Velaik - அலைகிளர்ச்சியையுடைய புணரி, Punari - கடலை அம்பள்ளி, Amballi - அழகிய படுக்கை யிடமாகவுடைய அம்மான், Amman - ஸர்வேச்வரனது அடியார் நிலா கின்ற, Adiyaar Nila Kindra - பக்தர்களான நித்யமுக்தர் விளங்கி வாழப்பெற்ற வைகுந்தமோ, Vaikundhamo - ஸ்ரீவைகுண்ட லோகோம வையோம, Vaiyoma - இந்த நிலவுலகமோ நும் நிலை இடம், Num Nilai Idam - உங்களது இருப்பிடம்? |