| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 256 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டோட ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்ற ஆ நிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே–3-4-3 | தோழன்மார்,Thozhanmaar - தன்னேராயிரம் பிள்ளைகள், சுரிகையும்,Surikaiyum - உடை வாளையும் தெறி வில்லும்,Theri Villum - சுண்டு வில்லையும் செண்டு கோலும்,Sendu Kolum - பூஞ்செண்டு கோலையும் மேல் ஆடையும்,Mel Aadaiyum - உத்தராயத்தையும் கொண்டு,Kondu - (கண்ண பிரானுக்கு வேண்டின போது கொடுக்கைக்காக) கையிற்கொண்டு ஓட,Oda - பின்னே ஸேவித்து வர, ஒருவன் தன்,Oruvan Than - ஒரு உயிர்த் தோழனுடைய தோளை,Tholai - தோளை ஒரு கையால்,Oru Kaiyal - ஒரு திருக் கையினால் ஊன்றி,Oonri - அவலம்பித்துக் கொண்டு (ஒரு கையால்),(Oru Kaiyal) - மற்றொரு திருக் கையினால் ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்,Aanirai Inam Meela Kuritha Sangam - (கை கழியப் போன) பசுக்களின் திரள் திரும்பி வருவதற்காக ஊத வேண்டிய சங்கை (ஊன்றி),(Oonri) - ஏந்திக் கொண்டு வருகையில்,Varugaiyil - மீண்டு வருமளவில் வாடிய,Vaadiya - வாட்டத்தை அடைந்துள்ள பிள்ளை கண்ணன்,Pillai Kannan - ஸ்ரீக்ருஷ்ண கிசோரனுடைய மஞ்சளும் மேனியும்,Manjalum Maeniyum - பற்று மஞ்சள் மயமான திருமேனியையும் வடிவும்,Vadivum - அவயவ ஸமுதாய சோபையையும் அருகே நின்றான் என் பெண்,Arugae Nindraan En Pen - (அவனுக்குச்) சமீபத்தில் நின்று கொண்டிருந்த என் மகள் கண்டாள்,Kandaal - (முதலில் எல்லாரும் பார்க்கிறாப்போல்) பார்த்தாள்; நோக்கி கண்டாள்,Nookki Kandaal - (பிறகு, அபூர்வ வஸ்து தர்ச நீயமாயிருந்த படியால்) கொஞ்சம் குறிப்பாகப் பார்த்தாள்; அது கண்டு,Adhu Kandu - அவ்வளவையே நிமித்தமாகக் கொண்டு இ ஊர்,E Oor - இச்சேரியிலுள்ளவர்கள் ஒன்று புணர்க்கின்றது,Ondru Punarugindrathu - (அவனுக்கும் இவளுக்கும் அடியோடில்லாத) ஒரு ஸம்பந்தத்தை யேறிட்டுச் சொல்லுகின்றனர்; ஏ,Ae - இதற்கு என் செய்வது! |