திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2561 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2561திருவிருத்தம் || 84
தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும், ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம் கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான் மையவண்ணா! மணியே,முத்தமே! என்றன் மாணிக்கமே!
பதவுரை Show / Hide
மைய வண்ணா, Maiya Vannaa - மையுடைய நிறம் போன்ற கரிய திருநிறமுடையவனே!
மணியே முத்தமே என்றதன் மாணிக்கமே, Maniye Muththame Endradhan Manikkame - நீலமேணியும் முத்தும் மாணிக்கமும் போல நிறத்தையும் அழகையும் ஒளியையும் உடைய எம்பெருமானே!
தையல் நல்லார்கள், Thayal Nallargal - அழகிய ஸ்த்ரீகள்
குழாங்கள் குழிய குழுவினுள்ளும், Kuzhangal Kuzhiya Kuzhuvinullum - கூட்டமாய்க் கூடின திரளினுள்ளே யாயினும்
ஐய நல்லார்கள், Aiyya Nallargal - சிறந்தவர்களான நல்லபுருஷர்கள்
குழிய விழவினும், Kuzhiya Vizhavinum - திரண்ட திருவிழாக்களிலாயினும்
அங்கு அங்கு எல்லாம், Angu Angu Ellam - இன்னும் அப்படிப்பட்ட திரள்களெல்லாவற்றிலுமாயினும்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும், Kaiya Pon Aazhi Ven Sangodum - கைகளிலுள்ள பொன்னிறமான சக்கரத்துடனும் வெண்ணிறமான சங்கத்துடனும்
நான் காண்பான் அலாவுவன், Naan Kaanbaan Alavuvan - நான் (உன்னைக்) காண ஆசைப்பட நின்றேன்.