| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 257 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி யூதி கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு என்றும் இவனை யொப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய் ஒன்றும் நில்லா வளை கழன்று துகி லேந்திள முலையும் என் வசமல்லவே–3-4-4 | நங்காய்,Nangai - பூர்த்தியை யுடையவனே! ஏடி,Edi - தோழீ! இவனை ஒப்பாரை,Evanai Oppaarai - இவனைப் போன்றுள்ள வ்யக்தியை என்றும்,Endrum - எந்த நாளிலும் கண்டு அறியேன்,Kandu Ariyaen - (நான்) பார்த்ததில்லை; வந்து காணாய்,Vandhu Kaanai - (இங்கே) ஓடிவந்து பார்; (என்று ஒருத்தி தன் தோழியை அழைக்க, அவள் சிறிது தாமஸிக்க, மேல் தனக்குப் பிறந்த விகாரத்தைச் சொல்லுகிறாள்;) கோவலன் ஆய்,Kovalan Aay - இடைப் பிள்ளையாகப் பிறந்து (இந்த்ர பூஜையை விலக்க) குன்று,Kundru - (பசிக் கோபத்தினால் இந்திரன் விடா மழை பெய்வித்த போது) கோவர்த்தன மலையை எடுத்து,Eduthu - (குடையாக) எடுத்து ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை காத்த,Kaatha - ரக்ஷித்தருளின பிரான்,Piraan - உபகாரகனும் குழல்,Kuzhal - குழலை ஊதி ஊதி,Oodhi Oodhi - பல கால் ஊதிக் கொண்டு கன்றுகள்,Kanrugal - கன்றுகளை மேய்த்து,Meyththu - (காட்டில்) மேய்த்து விட்டு தன் தோழரோடு உடன் கலந்து,Than Thozharodu Udan Kalanthu - தனது தோழர்களுடன் கூடிக் கொண்டு தெருவில்,Theruvil - இவ் வீதி வழியே வருவானை,Varuvaanai - வருபவனுமான கண்ணபிரானை கண்டு,Kandu - நான் கண்ட வளவிலே துகில்,Thugil - (எனது அரையிலுள்ள) புடவை கழன்று,Kalandru - (அரையில் தங்காதபடி) அவிழ்ந்தொழிய வளை,Valai - கை வளைகளும் ஒன்றும் நில்லா,Ondrum Nillaa - சற்றும் நிற்கின்றனவில்லை; ஏந்து,Enndhu - (என்னால்) சுமக்கப் படுகின்ற இள முலையும்,Ela Mulaiyum - மெல்லிய முலைகளும் என் வசம் அல்ல,En Vasam Alla - என் வசத்தில் நிற்கின்றனவில்லை. |