திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2573 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2573திருவிருத்தம் || 96
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய் இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.
பதவுரை Show / Hide
வணங்கும், Vanangum - (தெய்வத்தை) வணங்குகிற
துறைகள் பலபல, Thuraigal Palpala - வகைகள் பற்பலவற்றை
ஆக்கி, Aakki - உண்டாக்கி
மதி விகற்பால், Madi Vikarpal - அறிவின் வேறுபாட்டால்
பிணங்கும், Pinangum - (ஒன்றொடொன்று) மாறுபடுகிற
சமைய் பலபல, Samaiy Palapala - மதங்கள் பலவற்றையும்
ஆக்கி, Aakki - உண்டாக்கி
அவை அவை தோறு, Avai Avai Thor - அந்தந்த மதங்கள் தோறும்
அணகங்கும் பலபல, Anakangum Palapala - தெய்வங்கள் பற்பலவற்றையும்.
ஆக்கி, Aakki - உண்டாக்கி
நின்மூர்த்தி, Ninmoorthy - (இங்ஙனம்) உனது வடிவத்தைப் பரவச் செய்து வைத்துள்ளாய்
இணங்கும் நின்னோரை இல்லாய், Inangum Ninnorai Illai - உன்னோடு இணைத்துச் சொல்லத்தக்க உன்போல்வார் எவரையு மில்லாதவனே!
நின் கண், Nin Kan - உன்னிடத்திலேயே
வேட்கை, Vedkai - பக்தியை
எழுவிப்பன், Ezhuvippan - வரைச்செய்வேன்