திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2579 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2579திருவாசிரியம் || 2
உலகு படைத் துண்ட எந்தை, அறை கழல் சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு, அவாவா ருயிருகி யுக்க, நேரிய காதல் அன்பி லின்பீன் தேறல், அமுத வெள்ளத் தானாம் சிறப்பு விட்டு, ஒரு பொருட்கு அசைவோர் அசைக, திருவொடு மருவிய இயற்கை, மாயாப் பெருவிறல் உலகம் மூன்றினொடு நல் வீடு பெறினும், கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே?
பதவுரை Show / Hide
உலகு, Ulaku - உலகங்களை
படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்து
உண்ட, Unda - (பிரளய காலத்தில்)விழுங்கிய
எந்தை, Endhai - ஸர்வேச்வரனுடைய
அறை கழல் சுடர் பூ தாமரை, Arai Kazhal Sudar Poo Thamarai - ஆபரண வொலி பொருந்திய திருவடிகளாகிற அழகிய தாமரை மலர்களை
சூடுதற்கு, Soodutharku - சிரோ பூஷணமாக அணிவதற்கு
அவாவு, Avaavu - ஆசைப் படுகின்ற
ஆர் உயிர், Aar Uyir - அருமையான ஆத்மாவானது
உருகி உக்க, Urugi Ukka - நைந்து சிதிலமாக
நேரிய, Neriy - (அந் தத்யானத்தால்) ஸம்பவித்த பக்தியாகிய
அன்பில், Anbil - ஆசைப் பெருக்கத்தில் உற்பவித்து
இன்பு ஈன், Inbu Een - இன்பத்தைக் கொடுக்கிற
தேறல், Theral - தேன் போலிருக்கிற (அல்லது, தேனாகிய)
அமுதம் வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு, Amudham Vellathaan Aam Sirappu Vittu - அமிருத ப்ரவாஹத்தில் மூழ்கி யிருக்கையாகிற பெருமையை விட்டிட்டு
ஒரு பொருட்டு அசைவோர், Oru Poruttu Asaivor - க்ஷூத்ரமான வொரு பலனுக்காக அலைகின்றவர்கள்
அசைக, Asaika - அப்படியே அலையட்டும்; (அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?)
திருவோடு மருவிய இயற்கை, Thiruvoadu Maruviya Iyarkai - செல்வத்தோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கையாகிற நித்ய ஐச்வர்ய நிலைமை யென்ன.
மாயா பெரு விறல், Maayaa Peru Viral - அழியாத பெரு மிடுக்கென்ன
உலகம் மூன்றினொடு, Ulagam Moondrinodu - மூவுலகுக்கும் நாயகனாயிருக்கை யென்ன
நல்வீடு, Nalveedu - உத்தமமான மோக்ஷ பதவி யென்ன (ஆகிய இவற்றை)
பெறினும், Perinum - பெறுவதாயிருந்தாலும்
தெள்ளியதோர், Thelliyathor - விவேகிகளுடைய
குறிப்பு, Kurippu - அந்தரங்கமானது
கொள்வது எண்ணுமோ, Kolvathu Ennumo - பெற்றுக்கொள்ள நினைக்குமோ?