திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2581 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2581திருவாசிரியம் || 4
ஊழிதோறூழி ஓவாது வாழியே! என்று யான்தொழ இசையுங் கொல்?, யாவகை உலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்கெல்லாம் அரும்பெறல் தனிவித்து, ஒரு தான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலி மூவுலகம் விளைத்த உந்தி, மாயக்கடவுள் மா முதலடியே.
பதவுரை Show / Hide
யாவகை உலகமும், Yaavagai Ulagamum - எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும், Yaavarum - எவ்வகைப்பட்ட பிராணிகளும்
இல்லா, Illaa - இல்லாமலிருந்த
மேல் வரும் பெரு பாழ் காலத்து, Mel Varum Peru Pazh Kaalaththu - கீழ்க் கழிந்த மஹா ப்ரளய காலத்தில்
இரு பொருட்கு எல்லாம், Iru Porutkku Ellam - எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்
பெறல் அரு தனி ஒரு வித்து தான் ஆகி, Peral Aru Thani Oru Viththu Thaan Aagi - பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க் கொண்டு
தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று, Deivam Naan Mughan Kozhu Mulai Eendru - நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முளையைப் படைத்து
முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி, Mukkan Eeshanodu Pala Thevu Nuthali - முக் கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ் வகையாலே)
மூ உலகம் வளைத்த உந்தி, Moo Ulagam Valaitha Unthi - மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியை யுடையவனாய்
மாயன், Maayan - ஆச்சர்ய பூதனாய்
கடவுள், Kadavul - ஸர்வோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுடைய
மா முதல் அடியே, Maa Mudhal Adiye - (உஜ்ஜீவனத்திற்கு) மூல காரணமான திருவடிகளையே
ஓவாது, Ovaadhu - இடைவிடாமல்
வாழிய என்று யாம் தொழ இசையும் கொல், Vaazhiya Endru Yaam Thozha Isaiyum Kol - ‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ.