திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2583 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2583திருவாசிரியம் || 6
ஓஓ. உலகின தியல்வே ஈன்றோளிருக்க மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங் கடவுள் நிற்ப புடைப்பல தானறி தெய்வம் பேணுதல், தனாது புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி, கொல்வன முதலா அல்லன முயலும், இனைய செய்கை யின்பு துன்பளி தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே.
பதவுரை Show / Hide
உலகு, Ulaku - லோகங்களை
படைத்து, Padaithu - ஸ்ருஷ்டித்தும்
இடந்து, Idandhu - ஒருகால் வராஹா வதாரத்தில்) உத்தரித்தும்
உண்டு, Undu - (மற்றொரு கால் பிரளயம் வந்த போது) வயிற்றிலே வைத்து நோக்கியும்
உமிழ்ந்து, Umizhndhu - பிறகு வெளிப் படுத்தியும்
அளந்து, Alandhu - (பின்னுமொரு கால் த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப் படுத்திக் கொண்டும்
புடை, Pudai - ஏதோவொரு மூலையில் சொல்லப்பட்டும்
தான் அறி, Thaan Ari - தான் தோன்றித் தனமாக அறிந்து கொள்ளக் கூடியவும்
பல, Pala - வலகைப்பட்டு மிருக்கிற
தெய்வம், Deivam - தேவதைகளை
பேணுதல், Penuthal - ஆராதிப்பது
தனது, Thanathu - தன்னுடைய
புல் அறிவாண்மை, Pul Arivaanmai - நீச புத்தியை-பொருந்த காட்டி
விளங்கக் காட்டிக்கொண்டு, Vilangak Kaatikondhu - விளங்கக் காட்டிக்கொண்டு
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி, Eendroal Irukka Manai Neeratti - பெற்ற தாய்க்கு ஒரு உபசாரமும் பண்ணாதே வீட்டிட்டு அறிவற்றதொரு மணைக்கட்டைக்கு உபசாரம் பண்ணுவது போல,
கொல்வன முதலா, Kolvana Mudhala - ஆடு பலி கொடுத்தல் கோழி பலி கொடுத்தலாகிற ஜீவஹிம்ஸை முதலான
அல்லன முயலும், Allana Muyalum - தப்புக் காரியங்களைச் செய்ய நினைக்கையாகிற
தேர்ந்து, Therndhu - இப்படியாகவே இன்னும் பல ரக்ஷண வழிகளைச் சிந்தித்துக் கொண்டும்
அளிக்கும், Alikkum - (முக்காலங்களிலும்) ரக்ஷித்துக் கொண்டேயிருக்கிற
முதல் பெரு கடவுள் நிற்ப, Muthal Peru Kadavul Nirpa - ஸர்வ காரணனும் பராத்பானுமான ஸ்ரீமந்நாராயணன் (அவனை ஆச்ரயித்து உஜ்ஜீவிக்க மாட்டாமல்)
இனைய செய்கை, Inaiya Seykai - இப்படிப்பட்ட காரியங்களாயிரா நின்றன
அளி, Ali - (அந்த க்ஷுத்ர தெய்வங்களின்) ப்ரஸாதமோ
இன்பு துன்பு, Inbu Thunbu - ஸுகமென்று பேர் மாத்திரமான துக்கம் (அதாவது என்னெனில்)
தொல், Thol - அநாதியாய்
மா, Maa - மஹத்தாய்
மாயம், Maayam - ஆச்சரியமான
பிறவியுள், Piraviyul - ஸம்ஸாரத்தில் நின்றும்
நீங்கா, Neengaa - ஒரு நாளும் நீங்குதலின்றிக்கே
பல் மா மாயத்து, Pal Maa Maayathu - பலவகைப் பட்ட வ்யாமோஹ ஜநகங்களான சப்தாதி விஷயங்களிலே
நளிர்ந்து அழுந்தும் ஆ ஓஓ உலகினது இயல்வு, Nalirndhu Azhundhum Aa Ooo Ulaginathu Iyalthu - இப்படிப்பட்ட லோகஸ்வபநவம் என்ன பரிதாபம் ஐயோ! (என்கிறார்)