திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2584 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2584திருவாசிரியம் || 7
நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா, யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும் மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒரு பொருள் புறப்பா டின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த வெம் பெருமா மாயனை யல்லது,ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே
பதவுரை Show / Hide
நளிர்மதி சடையனும், Nalirmadhi Sadayanum - குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும்
நான்முகன் கடவுளும், Naanmugan Kadavulum - பிரமதேவனும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா, Thaliroli Himaiyavar Thalaivanum Mudhala - தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக
யாவரும், Yaavarum - எல்லாப் பிராணிகளும்
யாவகை உலகமும், Yaavagai Ulagamum - எல்லா வுலகமும்
அகப்பட, Akappada - உட்பட
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும், Nilam Neer Thee Kaal Sudar Iru Visumbum - பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும்
மலர் சுடர் பிறவும், Malar Sudar Piravum - சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும்
சிறிது, Siridhu - சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில்
மயங்க, Mayangka - கலசும்படியாக
ஒரு பொருள் புறப்பாடு இன்றி, Oru Porul Purappadu Indri - ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி
முழுவதும், Muzhavadum - எல்லாப் பொருள்களையும்
அகப்பட சுரந்து, Akappada Surandhu - உள்ளேயிட்டு மறைத்து
ஓர் ஆல் இலை சேர்ந்த, Or Aal Ilai Serndha - அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளி கொண்ட
எம், Em - எமக்கு ஸ்வாமியாய்
பெரு மா மாயனை அல்லது, Peru Maa Maayanai Alladhu - மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந் நாராயணனைத் தவிர்த்து
மற்று ஒரு மா தெய்வம், Mattru Oru Maa Deivam - வேறொரு க்ஷுத்ர தேவதையை
யாம் உடையமோ, Yaam Udaiyamo - நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ள மாட்டோம்)