திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2588 | பெரிய திருவந்தாதி || 4 | என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று. | பதவுரை Show / Hideஎன்ன, Enna - என்னுடையவனான நரும் சோதி கண்ணன், Narum Sothi Kannan - கறுத்த நிறத்தையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும் கடல் புரையும் சீலன், Kadal Puraiyum Seelan - கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும் பெரும் சேயதிக்கு, Perum Seyathikku - மிகப் பெரிய சோதிவடிவமானவனுமான எம்பெருமானுக்கு என் நெஞ்சு ஆள் பெற்று, En Nenju Aal Petru - என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால் என்னில், Ennil - என்னைவிட மிகு புகழார் யாவரே, Migu Pugazhaar Yaavare - மிக்க புகழுடையவர் யார் கொல்? மற்று பிள்ளையம் எண்ணில், Mattru Pillaiyam Ennil - இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில் மிரு புகழோன் யான் அல்லால், Miru Pugazhon Yaan Allaal - மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை. |