திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2593 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2593பெரிய திருவந்தாதி || 9
நுமக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென்?, மாலார் தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால் – எமக்கினி யாதானு மாகிடுகாண் நெஞ்சே! அவர்த்திறத்தே யாதானும் சிந்தித் திரு.
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenje - ஓ மனமே!
(மாலார்) அவர் தாம், Malar Avan Thaam - எம்பெருமானாகிற அப்பெரியவர் தாம்
சார்வு அரியர் ஆனால், Saarvu Ariyar Anaal - நமக்குக்கிட்ட முடியாதவராயிருக்கும்போது
நொந்து உரைத்து என், Nondhu Uraithu En - வாய் நோவச் சொல்வதில் என்ன பயன்?
இனி, Ini - இன்று முதலாக
எமக்கு ஆதானும்  ஆகிடு காண், Emakku Aadhanum Aagidu Kaan - நமக்கு எது வேணுமானாலும் நேரட்டும்;
மாலார் தமக்கு, Malar Thamakku - அவ்வெம்பெருமானை நோக்கி
நுமக்கு அடியோம் என்று என்று, Numakku Adiyom Endru Endru - “நாங்கள் உமக்கு அடிமைப்பட்டவர்கள்” என்று பல தடவை
அவர் திறத்தே, Avar Thiraththae - அப்பெருமான் விஷயமாகவே
யாதானும் சிந்தித்து இரு, Yaadhanum Sindhiththu Iru - எதையாவது சிந்தித்துக்கொண்டு கிடப்பாயாக.