| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 26 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 4 | உழந்தாள் நறு நெய் ஒரோ தடா வுண்ண இழந்தா ளெரிவினா லீர்த்து எழில் மத்தின் பழந் தாம்பாலோச்சப் பயத்தால் தவழ்ந்தான் முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே–1-2-4 | உழந்தாள்,Uzhandhaal - (நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய நறு நெய்,Naru nei - மணம் மிக்க நெய்யை ஒரோ தடா,Oro thadaa - ஒவ்வொரு தடாவாக உண்ண,Unna - (கண்ணன்) அமுது செய்த வளவில் இழந்தாள்,Izhandhaal - (பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை எரிவினால்,Erivinaal - வயிற்றெரிச்சலாலே ஈர்த்து,Eerththu - கையைப் பிடித்திழுத்து எழில் மத்தின்,Ezhil maththin - அழகிய மத்தினுடைய பழ தாம்பால்,Pazha thaambaal - சுற்றிக் கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை ஒச்ச,Ocha - (அடிப்பதாகக்) கையிலெடுக்க பயத்தால்,Payaththaal - அச்சத்தாலே தவழ்ந்தான்,Thavazhnthaan - (அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய முழந்தான் இருந்த ஆ காணீரே,Muzhandhaan irundha a Kaanire - முழங்கால்களிருந்தபடியை காணீர்! முகிழ் முலையீர் வந்து காணீரே,Mukhil mulaiyer vandhu kaanire - முகிழ்த்த முலையையுடைய பெண்காள்! வந்து காணீர்!! |