திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2604 | பெரிய திருவந்தாதி || 20 | காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று. | பதவுரை Show / Hideஅறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம், Arivu Kaik Konda Nal Nenjam - அறிவுடைய நல்ல நெஞ்சே மாணி உரு ஆகிக்கொண்டு, Maani Uru Aagikkondu - வாமநரூபியாய் உல்கம் நீர் ஏற்ற சீரான், Ulgam Neer Aetra Seeraan - (மாவலியிடத்திற் சென்று) உலகங்களை நீரேற்றப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால். சென்று, Sendru - தானே எங்கும் பரவி திரு ஆகம, Thiru Aagama - தனது திருமேனியினாலே தீண்டிற்று, Theendirru - உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை காணப்புகில், Kaanappugil - ஆராய்ந்தோமாகில் நாம் பேசில், Naam Pesil - நாம் பேசும் வார்த்தைகளுக்கு நாணப்படும் அன்றே, Nanappatum Anre - வெட்கப்பட வேண்டுமன்றோ |