திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2607 | பெரிய திருவந்தாதி || 23 | இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி – இளைப்பெய்த,
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான். | பதவுரை Show / Hideநெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! நமன் தமர்கள், Naman Thamarhal - யமபடர்கள் இளைக்க பற்றி, Ilaiyka Patri - பிடிக்கிற பிடியிலே நாம் துடிக்கும்படி நம்மைப் பிடித்து இளைப்பு எய்த, Ilaiyppu Eitha - அதற்கு மேலும் அதிகமாகத் துடிக்கும்படி நாய்தந்து மோதாமல், Naithandu Moothamal - நாய்களை ஏவி நலியாமற்படி நங்குவான் நல்காப்பான், Nanguvaan Nalkaappaan - (எம்பெருமான் நமக்கு) அருள் செய்தாலும் சரி, அருள் செய்யாவிட்டாலும் சரி; தான், Thaan - அந்த எம்பெருமான்தான் எவ்வுயிர்க்கும், Evvuirkkum - எல்லாப்பிராணிகளுக்கும் தாய் தந்தை, Thaai Thandai - தாயும் தமப்பனுமாவன்; சொன்னேன், Sonnain - (இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்; இளைப்பாய் இளைப்பாய், Ilaiyppai Ilaiyppai - இனி நீ அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு. |