திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2608 | பெரிய திருவந்தாதி || 24 | தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்கும் தற்றோன்றல்,- தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர். | பதவுரை Show / Hideதானே தனி தோன்றல், Thaane Thani Thondral - அவ்வெம்பெருமானொருவனே புருஷோத்தமன்; தானே தன் அனப்பு ஒன்று இல்லாதான், Thaane Than Anappu Ondru Illadhaan - அவனே ஒப்பற்றவன்; இளைக்கில், Ilaiykkil - (ரக்ஷிக்குந் தொழிலில்) சளைத்து நின்கிற பக்ஷத்தில் பார், Paar - இவ்வுலகமானது கீழ்மேல் ஆம், Keelmael Aam - தலைகீழாக விபரீதமாய்வீடும்; பிறர் தானே கட்கும் தற்றேன்றல், Pirark Thaane Katkum Thatrenral - அவனே மற்றெல்லாப் பொருள்களிலும் வியாபித்திருப்பவன்; (தானே), Thane - இப்படிப்பட்ட எம்பெருமான்றானே மீண்டு அமைப்பான் ஆனால, Meendu Amaippaan Aanala - (தலை கீழானவற்றை அவனே) மறுபடியும் சரிப்படுத்தப்புகுந்ததால் பாரின் மேல் ஆர் அளக்கிற்பார், Paarin Mel Aar Alakkirpaar - இப்பூமியில் ஆர்தாம் (அவனுடைய ரக்ஷகத்வத்தை) அளவிடவுரியர்? |