திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 261 | பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி யப்பித் திரு நாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தாலணிந்து
இந்திரன் போல் வரு மாயப் பிள்ளை எதிர் நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே–3-4-8 | பதவுரை Show / Hideசிந்துரம் பொடி கொண்டு,Sindhuram Podi Kondu - ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து தன்,Than - தன்னுடைய சென்னி,Senni - திரு முடியிலே சிப்பி,Sippi - அப்பிக் கொண்டும் அங்கு,Angu - திரு நெற்றியில் ஓர் இலை தன்னால்,Or Ilai Thannal - ஒரு இலையினாலே திரு நாமம் இட்டு,Thiru Naamam Ittu - ஊர்த்துவ புண்ட்ரம் சாத்திக் கொண்டும் நெறி,Neri - நெறித்திரா நின்றுள்ள பங்கியை,Pangiyai - திருக் குழலை அழகிய,Azhagiya - அழகிய நேத்திரத்தால்,Nethrathaal - பீலிக் கண்களினால் அந்தரம் இன்றி அணிந்து,Antharam Inri Anindhu - இடைவெளியில்லாதபடி (நெருங்க) அலங்கரித்துக் கொண்டும் இந்திரன் போல்,Endhiran Pol - ஸாக்ஷாத் தேவேந்திரன் போல வரும்,Varum - (ஊர்வலம்) வருகின்ற ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுக்கு எதிர் அங்கு,Ethir Angu - எதிர்முகமான இடத்தில் நின்று,Nindru - நின்று கொண்டு வளை இனம்,Valai Inam - கை வளைகளை இழவேல்,Ezhavael - நீ இழக்க வேண்டா” என்ன,Enna - என்று (என் மகளை நோக்கி நான் உறுத்திச்) சொல்லச் செய்தேயும் நங்கை,Nangai - (எனது) மகளானவள் சந்தியில் நின்று,Sandhiyil Nindru - அவன் வரும் வழியில் நின்று தன் துகிலொடு,Than Thugilodu - தனது துகிலும் சரிவளை,Sarivalai - கைவளைகளும் கழல்கின்றது,Kalalkindrathu - கழன்றொழியப் பெற்றாள். ஏ,Ae - இதென்ன அநியாயம்! |