திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2610 | பெரிய திருவந்தாதி || 26 | யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,- தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து. | பதவுரை Show / Hideஓர் இருள் தான் அன்ன மாமேனி, Oor Irul Thaan Anna Maameni - இருள்தானே ஒரு வடிவு கொண்டாற்போலிருக்கிற விலக்ஷணமான திருமேனியையுடைய எம் இறையார், Em Iraiyaar - எம்பெருமான் தந்த, Thanda - அளித்த அருள் என்னும் தண்டால், Arul Ennum Thandhaal - க்ருபையாகிற ஒரு தடியினாலே வல்வினையை, Valvinaiyai - கொடிய பாவங்களை அடித்து, Adiththu - புடைத்து, கானும் மலையும் புக, Kaanum Malaiyum Puga - (அவை) காடுகளிலும் மலைகளிலும் சென்று புருரும்படியாக கடிவான், Kadivaan - தூரத்துவதற்கு யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம், Yaanum En Nenjum Isainthozhindhom - நானும் என் மலாமுமாகிற இருவரும் இசைந்து நின்றோம். |