| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 262 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | வலங்காதின் மேல் தோன்றிப் பூ வணிந்து மல்லிகை வன மாலை மெளவல் மாலை சிலிங்காரத் தால் குழல் தாழ விட்டுத் தீங் குழல் வாய் மடுத் தூதி யூதி அலங்காரத்தால் வரு மாயப் பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே–3-4-9 | வலங்காதில்,Valangaadhil - வலது காதில் மேல் தோன்றிப் பூ,Mel Thondrip Poo - செங்காந்தள் பூவையும் வனம் மல்லிகை மாலை,Vanam Malligai Maalai - (திருமார்பில்) காட்டு மல்லிகை மாலையையும் மௌவல் மாலை,Mouval Maalai - மாலதீ புஷ்ப மாலையையும் அணிந்து,Anindhu - அணிந்து கொண்டு, சிலிங்காரத்தால்,Silingaarathaal - அலங்காரமாக குழல்,Kuzhal - திருக்குழல்களை தாழ விட்டு,Thaazha Vittu - (திரு முதுகில்) தொங்க விட்டுக் கொண்டு தீம் குழல்,Theem Kuzhal - இனிமையான வேய்ங்குழலை வாய் மடுத்து,Vaai Maduthu - திருப் பவளத்தில் வைத்து ஊதி ஊதி,Oodhi Oodhi - வகை வகையாக ஊதிக் கொண்டு, அலங்காரத்தால்,Alangaarathaal - (கீழ்ச் சொன்ன) அலங்காரங்களோடே வரும்,Varum - வாரா நின்ற ஆயர் பிள்ளை,Aayar Pillai - இடைப் பிள்ளையான கண்ணபிரானுடைய அழகு,Azhagu - வடிவழகை என் மகள் கண்டு,En Magal Kandu - என் மகள் பார்த்து ஆசைப்பட்டு,Aasaipattu - (அவனிடத்தில்) காமங் கொண்டு, விலங்கி நில்லாது,Vilangi Nillaadhu - (இவ்வடிவழகு கண்டவர்களை வருத்தும் என்று கண்ணை மாற வைத்துக் கடக்க நிற்க வேண்டி யிருக்க,) (அப்படி) வழி விலங்கி நில்லாமல் எதிர் நின்று,Ethir Nindru - (அவனுக்கு) எதிர்முகமாக நின்று வெள்வளை கழன்று,Velvalai Kalandru - (தனது) சங்கு வளைகள் கழலப் பெற்று மெய் மெலிகின்றது,Mey Melikindrathu - உடலும் இளைக்கப் பெற்றாள். |