திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2623 | பெரிய திருவந்தாதி || 39 | பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே! பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு. | பதவுரை Show / Hideநெஞ்சமே, Nenjamai - ஓ மனமே! தழைக்கும் துழாய் மார்வன் தன்னை, Thazhaikkum Thuzhai Maarvan Thannai - தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையைத் திருமார்விலே யுடையனான எம்பெருமானைக் குறித்து அழைத்து, Azhaitthu - கூப்பிட்டு ஒருகால், Orukaal - அவனுக்குத் திருவுள்ளமானவொரு காலத்திலே போய், Poy - பரமபதத்திலே சென்று பொலிய, Poliya - நன்றாக உபகாரம், Upakaaram - கைங்கரியங்கள் செய்கையாகிற உபகாரத்தை கொள்ளாது, Kollaadhu - கொள்ள முயலாமல் அவன் புகழே, Avan Pugazhe - அப்பெருமானது திருக்குணங்களையே வாய் உபகாரம் கொண்ட, Vaai Upakaaram Konda - வாயாலே சொல்லிக்கொண்டருக்கையாகிற வாய்ப்பு, Vaippu - இந்த நேர்பாடு பிழைக்க முயன்றோமோ, Pizhaikka Muyanrom - தப்பு செய்ததாமோ? பேசாய், Pesai - நீ சொல்வாய். |