திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2627 | பெரிய திருவந்தாதி || 43 | அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,
மனத்துயரை மாய்க்கும் வகை. | பதவுரை Show / Hideஅவயம் என நினைத்து வந்த, Avayam Ena Ninaiththu Vanda - அபயம் வேண்டிவந்து சரணமடைந்த சுரர் பால், Surar Paal - தேவதைகளிடத்திலுள்ள நவையை, Navaiyai - குற்றங்குறைகளை நளிர்விப்பான் தன்னை, Nalirvippaan Thannai - போக்கடிக்கு மெம்பிரானை சுவை இல் மனத்து, Suvai Il Manathu - ஒரு படிப்பட்ட மனத்திலே உயர வைத்து இருந்து, Uyar Vaiththu Irundhu - பரிபூர்ணமாக வைத்துக் கொண்டிருந்து வாழ்த்தா தார்க்கு, Vazhththaa Thaarakku - மங்களாசாஸனம் பண்ணாதவர்களுக்கு மனம் துயரை மாய்க்கும் வகையுண்டோ?, Manam Thuyirai Maaykkum Vagaiyundoo - தங்கள் மனத்திலேயுள்ள துக்கங்களைப் போக்கிக் கொள்ள வழி ஏது? |