| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 263 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-நான்காம் திருமொழி - தழைகளும்) (காலிப்பின்னேவரும் கண்ணனைக்கண்டு இடைக்கன்னியர் காமுறுதல்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதி யூடே கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–3-4-10 | விண்ணின் மீது,Vinnin Meedhu - பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே அமரர்கள்,Amarargal - நித்ய ஸூரிகள் விரும்பி,Virumbi - ஆதரித்து தொழ,Thozha - ஸேவியா நிற்கச் செய்தேயும் கண்ணன்,Kannan - ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா மறைத்து,Maraiththu - (அவர்களை மதியாமல்) மேனாணித்து ஆயர் பாடியில்,Aayar Paadiyil - திருவாய்ப்பாடியில் (வந்து அவதரித்து) வீதி ஊடே,Veedhi Oodae - தெருவேற காலி பின்னே,Kaali Pinnae - பசுக்களின் பின்னே எழுந்தருள,Ezhundharula - எழுந்தருளா நிற்க, இள ஆய் கன்னிமார்,Ila Aay Kannimaar - (அவ்வழகை)யுவதிகளான இடைப் பெண்கள் கண்டு,Kandu - பார்த்து காமுற்ற வண்ணம்,Kaamutra Vannam - காம லிகாரமடைந்த படியை, வண்டு அமர் பொழில்,Vandu Amar Pozhil - வண்டுகள் படிந்த சோலைகளை யுடைய புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் சொன்ன,Sonnan - அருளிச் செய்த மாலை பத்தும்,Maalai Paththum - சொல் மாலையாகிய இப் பத்துப் பாசுரங்களையும் இன்பம் வர,Inbam Vara - இனிமையாக பண்,Pan - பண்ணிலே பாடும்,Paadum - பாட வல்ல பக்தருள்ளார்,Bhaktar Ullaar - பக்தர்களா யிருக்குமவர்கள் பரமான,Paramaan - லோகோத்தரமான வைகுந்தம்,Vaikundham - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவர்,Nannuvaar - அடையப் பெறுவார்கள். |