திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2634 | பெரிய திருவந்தாதி || 50 | பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம். | பதவுரை Show / Hideபிரிந்து, Pirinthu - தம்மைவிட்டுப் பிரிந்து ஒன்று நோக்காது, Onru Nookkaadhu - வேறொன்றிலும் கண் வையாமல் தம்முடைய பின்னே, Thammudaiya Pinne - தம்மோடு கூடவே திரிந்து உழலும், Thirinthu Uzhalum - அலைந்துகொண்டு திரிகிற சிந்தனையார் தம்மை, Sindhanaiyaar Thammai - என் நெஞ்சினாரை ஒரு கால், Oru Kaal - ஒரு நாலாகிலும் புரிந்து, Purinthu - அன்புகூர்ந்து ஆ ஆ என இரங்கார், Aa Aa En Raingaar - ஐயோவென்று அருள்புரிகின்றலர் (பகவான்); அந்தோ, Andho - கஷ்டம்!; மா வாய் பிளந்தார் மனம், Maa Vaai Pilandhaar Manam - கேசியென்னும் குதிரையின் வாயைக் கிண்டொழித்த அப்பெருமானுடைய நெஞ்சு வலிதே கொல், Valithe Kol - கடினமோ; |