| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 265 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | வழு வொன் றுமிலாச் செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்டு மழை வந்து எழு நாள் பெய்து மாத்தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாத தோரீற்றுப் பிடி இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி யிடைக்காலிட் டெதிர்ந்து பொரும் கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே–3-5-2 | ஒன்றும் வழு இல்லா செய்கை,Ondrum Vazh Illa Seigai - (இந்திரபட்டம் பெறுதற்காகச் செய்த ஸாதநாம்சத்தில்) ஒரு குறையுமற்ற செய்கைகளை யுடைய வானவர் கோன,Vaanavar Kon - தேவேந்திரனுடைய வலி பட்டு,Vali Pattu - பலாத்காரத்துக்கு உள் பட்டும் முனிந்து விடுக்கப்பட்ட,Muninthu Vidukkapatta - (அவ் விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள மழை,Mazhai - மேகங்களானவை வந்து,Vandhu - (அகாலத்திலே குமுறிக் கொண்டு) வந்து ஏழு நாள் பெய்து,Ezhu Naal Peidhu - ஏழுநாளளவும் (இடைவிடாமல்) வர்ஷித்து மா தடுப்ப,Maa Thaduppa - பசுக்களை (வெளியே போகக் கூடாதபடி) தகைய மதுசூதன்,Madhusoodhan - கண்ணபிரான் எடுத்து,Eduthu - (ஸர்வ ஜநங்களையும் காப்பதற்காக அடி மண்ணோடு கிளப்பி) எடுத்து மறித்த,Maritha - தலை கீழாகப் பிடித்தருளின மலை,Malai - மலையானது (எது என்னில்;) இள சீயம்,Ila Seeyam - சிங்கக் குட்டியானது தொடர்ந்து,Thodarndhu - ( யானைக் குட்டியை நலிவதாகப்) பின் தொடர்ந்து வந்து முடுகுதலும்,Muduguthalum - எதிர்த்த வளவிலே, இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி,Izhal Thariyaadathu Oor Eetrupidi - (தன் குட்டியின்) வருத்தத்தைப் பொறுக்க மாட்டாத (அக் குட்டியைப்) பெற்ற பெண் யானை யானது குழவி,Kuzhavi - (அந்தக்) குட்டியை கால் இடை இட்டு,Kaal Idai Ittu - (தனது) நான்கு கால்களின் நடுவில் அடக்கிக் கொண்டு எதிர்ந்து,Edhirndhu - (அந்தச் சிங்கக் குட்டியோடு) எதிர்த்து பொரும்,Porum - போராடப்பெற்ற கோவர்த்தனம்,Govarthanam - குடையே-. |